பெங்களூர்:கடந்த 30௦ம் தேதி பெங்களூர் TANK GARDEN பகுதியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ‘School Chalo’ பிரச்சாரம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வண்ணமாக அமைந்தது.
இதில் சுமார் 250 மாணவ மாணவிகள் பங்குப பெற்றனர். பிரசாரத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானோர், அரசு பள்ளிகளில் பயின்று வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களை சார்ந்தவர்களாக இருந்தனர்.
இம்மாணவ, மாணவிகள் முன்னதாக கல்வியை அறிவுறுத்தும் கோஷங்களை எழுப்பியும், கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அறிவிப்பு பலகைகளை ஏந்திய படி Tank Garden பகுதியை சுற்றிவந்தனர்.
பிரச்சாரத்திற்குப் பின்னர் நடந்த கூட்டத்தில்,தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளை பி.எப்.ஐ. கெளரவித்தது.
வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் 'ஸ்கூல் சலோ' பிரச்சாரம் நாடு முழுவதும் கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிவுறுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியின் முடிவில், சுமார் 500௦௦ இலவச புத்தகங்களும் இப்பிரச்சாரத்தில் விநியோகிக்கப்பட்டது.
source:Twocircles.net
0 கருத்துகள்: on "கல்வியின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் ‘School Chalo’ பிரச்சாரம்"
கருத்துரையிடுக