கொச்சி:பி.டி.பி தலைவர் அப்துந்நாஸர் மஃதனிக்கெதிராக தான் வாக்குமூலம் அளிக்கவில்லை என பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தடியன்றவிட நஸீர் தெரிவித்துள்ளார்.
கொச்சி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ நஸீரை ஆஜராக்கிய பிறகு வெளியே வந்த நஸீரை எதிர்பாராதவிதமாக பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.
அப்பொழுது நஸீர் கூறியதாவது; "நான் மஃதனிக்கெதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை. தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள். நீதியான முறையில் புலனாய்வை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.இதனை பத்திரிகைகள் மேற்கொள்ளவேண்டும்" இவ்வாறு நஸீர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அப்துந்நாஸர் மஃதனிக்கெதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை தடியன்றவிட நஸீர்"
கருத்துரையிடுக