புதுடெல்லி:தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலுக்கு சிவசேனாவின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரேயை தேர்வுச் செய்ததை கண்டித்து மனித உரிமை ஆர்வலரான ஷப்னம் ஆஸ்மி தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்தார்.
பிரதமர் தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலுக்கு நேற்றுதான் உத்தவ் தாக்கரே உறுப்பினராக பரிந்துரைச் செய்யப்பட்டார். வெறுப்பு மற்றும் பிரிவினையின் அரசியல்தான் உத்தவ் தாக்கரேயின் கொள்கை என்றும், அவரைத் தேர்ந்தெடுத்தது அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் ஷப்னம் ஆஸ்மி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கடைபிடிக்கும் மதசார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது உத்தவ் தாக்கரேயின் மதவாத அரசியல் நிலைப்பாடு என மனித உரிமை அமைப்பான அன்ஹதின் ஸ்தாபகரான ஷப்னம் ஆஸ்மி தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் உத்தவ் தாக்கரே: ஷப்னம் ஆஸ்மி ராஜினாமா"
கருத்துரையிடுக