6 ஜூன், 2010

பன்றிக்காய்ச்சல்:உலக சுகாதார நிறுவன மருத்துவ வல்லுநர்கள் மருந்துக் கம்பெனிக்கு ஆதரவாக செயல்பட்டதாக விசாரணை அறிக்கை

வாஷிங்டன்:பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துக்களை சேகரித்து வைக்க உலக சுகாதார நிலையம் உலக நாடுகளுக்கு அளித்த பரிந்துரையின் பின்னணியில் மருந்துக் கம்பெனிகளுக்கும்,மருத்துவர்களுக்கும் இடையேயான ரகசிய உடன்பாடுதான் காரணம் என விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் மூலம் லாபத்தை சம்பாதித்த மருந்துக் கம்பெனிகளுடன் தங்களுக்கு வியாபாரத் தொடர்பு உள்ளதை மருத்துவ வல்லுநர்களே ஒப்புக்கொண்டதாக பிரிட்டீஷ் மெடிக்கல் ஜேர்னல்(பி.எம்.ஜெ) உறுதிச்செய்துள்ளது.

பன்றி காய்ச்சல் ஒரு பரவும் கொடிய நோய் எனவும் அதற்கான மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டுமென்றும் 2004 ஆம் ஆண்டிலேயே உலக சுகாதார நிறுவனம்(WHO) உலக நாடுகளுக்கு பரிந்துரைத்தது.

இதனைத்தொடர்ந்து பல நாடுகளும் டாமி ஃப்ளூ என்ற மருந்தை அதிகமாக சேகரித்து வைத்தன. க்ளாஸ்கோ ஸ்மித் என்ற கம்பெனியின் கீழ் ரோச்சே ரெலன்ஸா ஆகிய கம்பெனிகள்தான் டாமி ஃப்ளூவை தயாரித்தன.

பி.எம்.ஜெவும் இன்வஸ்டிகேடிவ் ஜெர்னலும் இணைந்து நடத்திய விசாரணையில் 2004 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கு பன்றிக்காய்ச்சல் மருந்துகளுக்கு பரிந்துரைத்த மூன்று மருத்துவ வல்லுநர்கள் முன்னர் க்ளாஸ்கோ ஸ்மித் மற்றும் ரெய்சே கம்பெனிகளுக்காக பணியாற்றியுள்ளனர் என்பது தெளிவானது.

இவர்களுக்கும் மருந்துக் கம்பெனிகளுக்குமிடையேயான தொடர்பை உலக சுகாதார நிறுவனம் வெளியேக் கூறாமல் மறைத்துவிட்டது.

பன்றிப் காய்ச்சலை பரவும் வியாதியாக பிரகடனப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கு ஆலோசனை வழங்கிய மருத்துவ வல்லுநர்களின் குழுவில் எவரெல்லாம் உட்பட்டிருந்தார்கள் என்ற விபரமும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பன்றிக்காய்ச்சல்:உலக சுகாதார நிறுவன மருத்துவ வல்லுநர்கள் மருந்துக் கம்பெனிக்கு ஆதரவாக செயல்பட்டதாக விசாரணை அறிக்கை"

கருத்துரையிடுக