25 ஜூன், 2010

டாலர், யூரோ வரிசையில் இந்திய ரூபாய்க்கும் புதிய குறியீடு

இந்திய ரூபாய்க்கு புதிய சின்னத்தை இன்னும் ஓரிரு நாளில் மத்திய அரசு முடிவு செய்து அறிவிக்கிறது. டாலர், பவுண்ட், யூரோ வரிசையில் இனி இந்திய ரூபாய் சின்னத்தால் குறிப்பிடப்படும்.

அமெரிக்க டாலர், ஐரோப்பிய யூரோ, பிரிட்டன் பவுண்டு, ஜப்பான் யென் என வளர்ந்த நாடுகளின் கரன்சிக்கு சின்னங்கள் உள்ளன. அவை உலக அளவில் பிரபலமாக உள்ளன. அதுபோல, இந்திய கரன்சியான ரூபாய்க்கும் சின்னம் அறிவிக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார்.

சின்னத்தை வடிவமைத்து அனுப்ப மக்களுக்கு கடந்த பிப்ரவரியில் வாய்ப்பு தரப்பட்டது. அதற்கு ஏராளமானோர் தங்கள் படைப்பை அனுப்பினர்.

கடந்த சில மாதங்களாக அவை பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் 5 சின்னங்களை மத்திய அரசு இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்துள்ளது. அதில் ஒரு சின்னத்தை இந்த வார இறுதிக்குள் மத்திய அமைச்சரவை தேர்வு செய்து அறிவிக்கும் எனத் தெரிகிறது.

ரூபாய் என்பதன் ஆங்கில வார்த்தையான ‘ருப்பி’யின் முதல் எழுத்தான ‘ஆர்’ வரும் வகையில் இந்தி ‘ர’ வடிவில் இது அமைந்துள்ளது. அதன் நடுவே டாலர், யென் சின்னங்களில் உள்ள இரண்டு கோடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சின்னம் அரசால் தேர்வு செய்யப்பட்டால்,அதை வடிவமைத்தவர் அதற்கான காப்புரிமையை அரசிடம் சரண்டர் செய்ய வேண்டும். அதற்கு சன்மானமாக ரூ.2.5 லட்சம் அளிக்கப்படும்.

இனி வரும் காலங்களில் அச்சடிக்கப்படும் கரன்சி நோட்டுகள்,நாணயங்களில் இந்திய ரூபாய் சின்னம் கட்டாயம் இடம்பெறும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டாலர், யூரோ வரிசையில் இந்திய ரூபாய்க்கும் புதிய குறியீடு"

கருத்துரையிடுக