3 ஜூன், 2010

ஓகினாவாவில் அமெரிக்க ராணுவ தளம்: ஜப்பான் பிரதமர் ராஜினாமா

டோக்கியோ:ஓகினாவா தீவில் அமெரிக்காவின் ராணுவ தளத்தை அகற்றுவேன் என தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாததால் ஜப்பான் பிரதமர் யூகியோ ஹதோயமா ராஜினாமாச் செய்தார்.

கடந்த ஒன்பது மாதத்திற்கு முன்புதான் ஹதோயமா பிரதமராக பதவியேற்றார். ஓகினாவா தீவிலேயே அமெரிக்க ராணுவ தளம் தொடர்ந்து செயல்படலாம் எனவும், ஒப்பந்தத்தின் கால அளவை நீட்டிக்கலாம் எனவும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து ஹதோயமா அரசின் தோழமைக் கட்சியான இடதுசாரிகள் ஆதரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்றனர்.

ஜப்பான் பிரதமரின் அமெரிக்க ஆதரவு தீர்மானத்திற்கு ஓகினாவா தீவின் மேயர்கள் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாததற்கு ஓகினாவா தீவு மக்களிடம் மன்னிப்புக் கேட்ட ஹதோயமா பின்னர் தனது பதவியை ராஜினாமாச் செய்தார்.

பொதுமக்களின் விருப்பத்தை பாதுகாக்க அரசால் இயலவில்லை என டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் ஜப்பான் எம்.பிக்களின் கூட்டத்தில் ஹதோயமா தெரிவித்தார்.

ஜப்பானில் கடந்த 50 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சிக்கு விடை கொடுத்துவிட்டு டி.பி.ஜெ பெற்ற வெற்றி உலக கவனத்தை ஈர்த்திருந்தது.

அமெரிக்காவில் கல்வி கற்றவர்தான் 63 வயதான ஹதோயமா. கடந்த 4 ஆண்டுகளுக்கிடையே ஜப்பானில் ராஜினாமாச் செய்யும் நான்காவது பிரதமர் ஹதோயமா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரு கொரியாக்களுக்கு இடையே யுத்தசூழல் உருவாகியிருக்கும் காலக்கட்டத்தில் தென்கொரியாவுக்கு சார்பாக நிற்கும் அமெரிக்காவுக்கு ஓகினாவா ராணுவ தளம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஓகினாவாவில் அமெரிக்க ராணுவ தளம்: ஜப்பான் பிரதமர் ராஜினாமா"

கருத்துரையிடுக