2 ஜூன், 2010

இஸ்ரேலை இனியும் கட்டவிழ்த்து விடலாமா?

இஸ்ரேலின் கடுமையான தடையின் காரணமாக பட்டினியால் வாடி வதங்கும் ஃபலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசியப் பொருட்களுடன் காஸ்ஸாவை நோக்கி வந்துக் கொண்டிருந்த ‘ஃப்ரீடம் ஃப்ளோடில்லா’ என்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

உயிர்வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் கப்பல்களில் புறப்பட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களின் மீதுதான் இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது.

அத்தோடு இனிமேலும் தாக்குவோம் என வெறித்தனமாக கொக்கரித்து வருகிறது. தாக்குதலுக்குள்ளானவர்கள் இஸ்ரேலின் எல்லையில் அத்துமீறி நுழைந்த அந்நிய நாட்டு ராணுவ வீரர்களல்லர். இஸ்ரேலால் தகர்க்கப்பட்டது ஆயுதங்களை தாங்கி வந்த எதிரி நாட்டு போர்க்கப்பல்களுமல்ல.

இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு குடிக்க தண்ணீரும், உண்ண உணவும், நோய்களுக்கு மருந்தும் அளிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மடியக்காத்திருக்கும் காஸ்ஸாவின் மனித உயிர்களை காப்பாற்றுவதற்காக இஸ்ரேலின் தடைகளை பொருட்படுத்தாமல் அத்தியாவசியப் பொருட்களுடன் சென்றதுதான் அவர்கள் செய்த தவறு.

அமெரிக்கா,பிரிட்டன்,ஹாலந்து,பெல்ஜியம்,க்ரீஸ், போலந்து, இத்தாலி,துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மனித நேயப்பணியாளர்களும், ஃபலஸ்தீன் வம்சாவழியைச் சார்ந்தவர்களுமடங்கிய சமாதான குழுவில் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.

பிரபல எழுத்தாளர் ஹென்னிங் மான்கெல், சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற மெய்ரீட் கோரிகன்- மாகூர் ஆகியோர் இந்த காஸ்ஸா நிவாரண குழுவில் அடங்குவர்.

ஆனால் மனித உரிமைகளை மதிக்காத, இனவெறியை மட்டுமே இலட்சியமாகக் கொண்ட சியோனிஷ தேசத்திற்கு இவையெல்லாம் தாக்குதலை தவிர்ப்பதற்கு போதிய காரணங்களல்ல.

இம்முறை இஸ்ரேலின் கொடூரங்களுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், ஐரோப்பியன் யூனியனும் ஏன் இஸ்ரேலை தாலாட்டி வளர்த்தும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது சுபச் செய்திகள்தான்.

உலக மரியாதைகளையும், சர்வதேசச் சட்டங்களையும் காற்றி பறத்திவிட்டு இஸ்ரேல் அக்கிரமங்களை கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறையா என்ற உண்மையை இவர்களெல்லாம் உணரவேண்டும்.

சொந்த நாட்டில் அந்நியர்களாக்கப்பட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் அப்பாவி ஃபலஸ்தீன் மக்களுக்கெதிராக கடந்த அரைநூற்றாண்டாய் தொடரும் இஸ்ரேலின் வரம்பற்ற அக்கிரமங்களின் சமீபத்திய எடுத்துக்காட்டுத்தான் ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கப்பல் மீது நடத்திய தாக்குதல்.

மேற்கத்திய நாடுகளின் உள்ளார்ந்த ஆதரவும், ஐக்கிய நாடுகளின் நிரந்தர மெளனமும்தான் இஸ்ரேல் இத்தகைய கொடூரங்களை தொடர்வதற்கு துணிச்சலைக் கொடுத்தவையாகும்.

ஆகவே நிவாரண கப்பல்களும், சமாதான பணியாளர்களும் தாக்கப்பட்டதற்கு இவர்களும் முக்கிய காரணகர்த்தாக்களாவர்.

இஸ்ரேலின் கொடூரத்தை நமது நாடும் கண்டித்தது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் ஃபலஸ்தீன் மக்களுக்கு என்றும் நட்பு நாடாக இருந்து வந்த இந்தியா சியோனிஷ்டுகளுக்கு சற்றும் சளைக்காத பாசிஸ்டுகளின் ஆட்சியின் பொழுது இஸ்ரேலுடனான நட்புறவைத் துவக்கியது. அந்நட்புறவை முறை தவறாமல் பேணிவருகிறார்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியாளர்கள்.

ஆகவே இஸ்ரேலின் கொடூரத்தை கண்டிப்பது உண்மையிலேயே ஆத்மார்த்தரீதியாக வேண்டுமென்றால் அந்நாட்டுடன் செய்துக்கொண்ட அனைத்து உடன்படிக்கைகளையும், ராணுவ ஒத்துழைப்பையும் ரத்துச் செய்யவேண்டும். இல்லையென்றால் இரத்த வெறிப்பிடித்த ஒரு தேசத்துடன் நட்புறவைக் கொண்டதற்காக எதிர்காலத்தில் இந்தியா மிகவும் வருந்தவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 கருத்துகள்: on "இஸ்ரேலை இனியும் கட்டவிழ்த்து விடலாமா?"

Mohamed Ameen சொன்னது…

Israel is a fit case for Nuremberg type of trial and Belgrade type American bombings.

Israel is the only regime that has violated more than 60 resolutions of the UN Security council, the UN Charter, ICCPR, ICESCR and Geneva Conventions.

Israel is the only one in the whole, West Asian region which has the possession of over 200 thermo-nuclear weapons. It has neither signed NPT( but Iran has) nor allowed weapons inspection( Iran has allowed) despite the UNSC resolution 687 of 1991 which call for West Asia Free from Nuclear weapons and WMD.

It has a long record of uprooting Palestinians( about 7 million refugees) occupying all their territories in 1967. The recent UN report has accused Israel of war crimes and crimes against humanity.

Why does the world community( read the US) allow Israel to stand above the law. The Managing director of German Branch of international association of lawyers Against Nuclear Arms(IALANA) Reiner Braun said on 13th April 2010, that there is no substantial evidence that Iran is having a nuclear weapons programme.

There are only unproven allegations against Iran

Mohamed Ameen சொன்னது…

Israel is the 51st State of the USA. Israel is fast becoming an “untouchable nation” like South Africa before the final collapse of apartheid.

No one except the US accepts the legitimacy of Israel’s settlement growth and brutal occupation policies uprooting Palestinians, dispossessing them.

Isreal has become more reactionary, inward looking and has built a police state waging unending war against its neighbours.

Britain has warned the UK citizens not to surrender their passports to Israeli authorities as they may clone their passports to support illegal assassination activities.

Bibi and Lieberman are racists who have openly advocated executing Arab Knesset members and drowning Palestinian prisoners in the dead seas. Once Lieberman called for bombing Aswan dam to punish the Egyptians. In spite of all these, the US considers Israel as a western style democracy.

Mohamed Ameen சொன்னது…

UN Boss Ban Ki Moon is an American Puppet. The UN had in the past 63 years passed 32 resolutions condemning Israel on its inhuman actions, aggression, occupation, settlements, dispossession.

The reply by Israel to all these resolutions is GO TO HELL WITH THE UN. What would have happened to a weaker nation such as Iran if the SCs resolution had condemned it?

The SC would introduce sanctions and within a few months the US B52s would do their job of destroying Irans infrastructure. Can the UNO and its puppet secretary move his little finger in the case of Israel dropping SCs resolutions in the waste paper basket? Any sanctions on Israel. Please no jokes.

Israel is a Brahmin. Palestinians are polluted untouchables.

That is why the former Prime Minister of Malaysia Dr.Mahathir said the Jews rule the world by proxy, in one sentence he summarized the power, might and political domination of the Zionists in the world. So we have to salute India for befriending a world rogue state

Mohamed Ameen சொன்னது…

Israels attack on the peace flotilla was an outrage. A freed Press TV correspondent has revealed details
about an attack by Israeli commandos against the Gaza Freedom Flotilla aid convoy.

Hassan Ghani ( the reporter)said Israeli soldiers threw stun grenades and used rubber bullets against the people onboard the aid ships. The attack on the convoy left at least nine activists dead and more than 40 others injured.

Many pro-Palestinian activists were detained by Israel for a number of days. Ghani went on to say that an activist was shot straight in the forehead by an Israeli bullet, which indicated that it was not an act of self-defense by the soldier but a planned-out shot, which he had time to take.

After many casualties on board, the organizers tried to prevent a massacre so they raised a white flag to surrender and told the Israeli forces to stop firing.

Those under Israeli custody weren’t even allowed to use the toilet without pleading and begging the Israeli soldiers.

Mohamed Ameen சொன்னது…

My grand father used to narrate a story about the one and only upper caste landlord who had about 800 acres under his ownership and control around a village in Andhra Pradesh state, India.

Everyone low caste human in the village slavishly worked for the land lord and got meagre wages and even the young women were free game for the land lord.

He could pick and choose them to satisfy his immoral and unlawful carnal lust. He was the only one possessing a gun, crude weapons, paid body guards and the power, political influence and domination that his caste and wealth could buy.

This is the best analogy for Israels 21st century brute power, domination, military might and unbridled authority in the world.

The UNO or the US or no body can do anything to control the thuggery as there was no body to control the thuggery of the landlords of British India about a hundred years ago.

This is the reason why the persecuted believe in the laws of Allah SWT to come into operation sometime in the course of history. It may come slowly but it is sure to come. A nation like israel will fall by its own weight.

கருத்துரையிடுக