ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மேலும் சட்டசபையும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று கூடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதலை அளித்தது. அம்மாநில அரசியல் நிலவரம் குறித்து மாநில ஆளுநர் ஃபரூக் மரைக்காயர் அளித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த முடிவுக்கு அமைச்சரவை வந்தது.
நேற்று தனது அறிக்கையை ஃபரூக் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தார்.
அமைச்சரவை ஒப்புதல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. சட்டசபை கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் நிலைத்தன்மைக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும் வெகு தூரமாகி விட்டது.கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு அரசியல் ஸ்திரமின்மை தொடர்ந்து நிலவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று முதல்வர் சிபு சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தேவையான ஆதரவைத் திரட்ட முடியாததால் அவர் விலகினார்.
லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தை எதிர்த்து சிபு சோரன் ஓட்டுப் போடப் போக பிரச்சினை தொடங்கியது.
கூட்டணி வைத்துள்ள நிலையில் காங்கிரஸுக்கு ஆதரவாக சிபுசோரன் செயல்பட்டதால் கொதிப்படைந்த பாஜக, சோரனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற தீர்மானித்தது.
காங்கிரஸ் ஆதரவைப் பெற்று ஆட்சியைத் தொடரலாம் என நினைத்திருந்தார் சோரன்.ஆனால் காங்கிரஸ் திடீரென ஜகா வாங்கவே, பீதியடைந்த சோரன், பாஜகவிடம் சரணடைந்து மன்னிப்பெல்லாம் கேட்டார். சோரனின் மகனும், பாஜக தலைமையுடன் பேசி சமரசத்திற்கு முயன்றார்.
இதையடுத்து இறங்கி வந்த பாஜக, தனது தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைக்க யோசனை தெரிவித்தது. இதற்கு சோரனும், அவரது மகனும் ஒத்துக் கொண்டனர்.
ஆனால் திடீரென மீண்டும் சோரன் குழப்பத் தொடங்கினார். பாதி நாட்கள் உங்களது ஆட்சி, மீத நாட்கள் எங்களது ஆட்சி என்றார் சோரன். இப்படியாக சோரன் சொதப்பி வந்ததால், மே24ம் தேதி சோரன் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டது பாஜக.
இதையடுத்து சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சோரன் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. காங்கிரஸும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது.
ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ஜார்க்கண்ட்டில் பொதுத் தேர்தல் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.
கட்சிகள் நிலவரம்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 18
பாஜக - 18
அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் - 5
ஐக்கிய ஜனதாதளம் - 2
காங்கிரஸ் - 14
ஜேவிஎம்பி - 11
ராஷ்டிரிய ஜனதாதளம் -5
சுயேச்சைகள் - 5
source:thatstamil

0 கருத்துகள்: on "ஜார்க்கன்டில் ஜனாதிபதி ஆட்சி அமலானது - சட்டசபை முடக்கம்"
கருத்துரையிடுக