ஆஃப்கனில் நிலைக்கொண்டு தலிபான்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆக்கிரமிப்பு படைகள் ஈடுபட்டுள்ளது. இவர்கள் தலிபான்களுடன் போரிட்டு வருகிறார்கள்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்களின் மூலம் அந்நிய ஆக்கிரமிப்பு படை வீரர்களை தலிபான்கள் தாக்கி வருகின்றனர். சமீப காலமாக இது போன்ற தாக்குதல்களை தலிபான்கள் அதிகரித்துள்ளனர். இந்த ஒரு மாதத்தில் (ஜூன் மாதம்) மட்டும் அந்நிய ஆக்கிரமிப்பு படை வீரர்கள் 100 பேரை இவர்கள் கொன்று குவித்துள்ளனர்.
சமீப காலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும். இந்த தகவலை அமெரிக்க ராணுவத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை பன்னாட்டு படையை சேர்ந்த 320 வீரர்கள் பலியாகி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "தலிபான்களின் தீவிர தாக்குதலால் நேட்டோ படை வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்வு"
கருத்துரையிடுக