டெல்லி:புக் எ மீல் என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்துகிறது. அதன்படி டிக்கெட்டுடன் நமக்குத் தேவையான சாப்பாட்டையும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் சாப்பாட்டுக்கான பணத்தை சாப்பாடு நமது கைக்கு வந்த பின்னர் கொடுத்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின்படி ஆன்லைன் மூலமாக http://www.irctc.co.in/ (Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) இணையதளம் மூலம்) படுக்கை வசதியுடன் கூடிய டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பயணிகள், தங்களுக்கு விருப்பமான உணவையும் சேர்த்தே முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த உணவு, பயணிகள் ரயிலில் பயணம் செய்யும்போது அவர்களது சீட்டை தேடி வந்து விடும்.
மசாலா தோசை முதல் முட்டை பிரியாணி வரை அனைத்து வகை சாப்பாடும் இதற்கான மெனுவில் உள்ளது. உணவு நம்மைத் தேடி வந்ததும் அதற்கான பணத்தைக் கொடுத்தால் போதும். இதை ரொக்கமாக மட்டுமே தர வேண்டும்.
உறுதிப்படுத்தப்பட்ட இ டிக்கெட்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும்.
0 கருத்துகள்: on "'புக் எ மீல்' என்ற பெயரில் ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம்"
கருத்துரையிடுக