20 ஆக., 2010

புதுவை: முஸ்லிம்களுக்கு 2 சதவீதம் உள் ஒதுக்கீடு

பாண்டிச்சேரி,ஆக20:கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு, தலா 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் வி.வைத்திலிங்கம், வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அமைச்சரவைக் கூட்டம், சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.

கூட்டத்தின் முடிவு குறித்து முதல்வர் வி.வைத்திலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது;"முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 12 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் உள் ஒதுக்கீடாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அரசு ஆணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும். புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான மறு கவுன்சலிங் விரைவில் நடத்தப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை இதில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்கால், யேனாம், மாஹே பகுதிகள் பின்தங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து பிராந்தியவாரியாக இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தற்போது அப்பகுதி மாணவர்களும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர்.

இதனால் அடுத்த ஆண்டு பிராந்தியவாரியாக ஒதுக்கீடு தொடர்வதா? என்பது குறித்து, கமிட்டி அமைத்து ஆய்வு செய்யப்படும்.

புதுச்சேரிக்கான 75 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனினும் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்." என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புதுவை: முஸ்லிம்களுக்கு 2 சதவீதம் உள் ஒதுக்கீடு"

கருத்துரையிடுக