20 ஆக., 2010

அணு விபத்து இழப்பீடு மசோதா: எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் நீக்கப்பட்ட 'and' என்ற வார்த்தை!

டெல்லி,ஆக20:எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பைத் தொடர்ந்து அணு விபத்து இழப்பீடு மசோதாவில் உள்ள 'and' என்ற வார்த்தையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இதையடுத்து இன்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற குழு தெரிவித்த பரிந்துரைகள் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சரவை, வெள்ளிக்கிழமை காலை கூடி இந்த மசோதாவில் செய்யவேண்டிய திருத்தம் தொடர்பாக விவாதிக்கும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தேச அணு விபத்து இழப்பீடு சட்டம் தொடர்பான சில அம்சங்கள் மீது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

2008ல் நிறைவேறிய இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின்படி இரு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி வர்த்தகம் நடைமுறைக்கு வர இந்த சட்டம் அவசியம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு நவம்பரில் வரவுள்ளார். அதற்குள்ளாக அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முனைப்பாக உள்ளது.

இந்த மசோதாவுக்கு பாஜகவின் ஆதரவை பெற காங்கிரஸ் ரகசிய உடன்பாடு செய்துகொண்டுள்ளதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சொராஹ்புதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கிலிருந்து விடுக்க முயற்சிப்பதாகவும் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி உள்ளிட்டவை குற்றம்சாட்டியுள்ளன.

இந்த நிலையில் மசோதாவில் உள்ள 'and' என்ற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் அதை தற்போது அரசு நீக்கி விட்டது.

இந்த ஒரு வார்த்தையால், அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உரிய இழப்பீடு தராமல் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனையாகும். இதையடுத்து இதை சரி செய்ய அரசு ஒத்துக் கொண்டது.

எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்த மசோதாவில் இடம்பெற்றுள்ள 17வது பிரிவுதான். தற்போது அந்த 'and' வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் எப்படி அந்த பிரிவு திருத்தப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. இந்த திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து இன்றே சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணு விபத்து இழப்பீடு மசோதா: எதிர்கட்சிகளின் எதிர்ப்பால் நீக்கப்பட்ட 'and' என்ற வார்த்தை!"

கருத்துரையிடுக