4 ஆக., 2010

ஒரே பொய்யைக் கூறி 31 அப்பாவிகளை கொன்ற குஜராத் போலீஸ்

புதுடெல்லி,ஆக4:2002 மார்ச்சில் முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு சுமார் 31 நபர்களை குஜராத் அரசு போலி என்கவுண்டரில் கொலைச்செய்துள்ளது. இதில் 21 பேர் கொல்லப்பட்டது 2003-2006 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்திலாகும்.

இனப்படுகொலைக்கு பிறகு முஸ்லிம்களை பீதியில் ஆழ்த்துவதற்கு போலி என்கவுண்டர் படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி சமீர்கான் பத்தான் என்பவர்தான் குஜராத் போலீஸின் முதல் போலி என்கவுண்டர் மூலம் படுகொலைச் செய்யப்பட்ட அப்பாவியாவார். அதனைத் தொடர்ந்து 30 பேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 16 கொலைகளை நிகழ்த்தியது குஜராத் தீவிரவாத எதிர்ப்புப்படையாகும்.போலி என்கவுண்டரில் 2 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இக்கொலைகளுக்கெல்லாம் அதிர்ச்சித் தரக்கூடிய ஒற்றுமை உள்ளன. எல்லா போலி என்கவுண்டர் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டது அதிகாலையிலாகும். கொல்லப்பட்டவரெல்லாம் நரேந்திர மோடியையோ அல்லது பா.ஜ.க தலைவர்களையோ கொல்லவந்த தீவிரவாதிகள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

16 பேரில் 13 பேர் முஸ்லிம்களாவர். அவர்களில் 6 பேர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். போலி என்கவுண்டர் படுகொலைகள் பெரும்பாலும் நடைபெற்றது அஹ்மதாபாத்திலாகும்.

குஜராத் போலீஸ் போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது 15 பேராகும். இவர்கள் அனைவருமே குற்ற வழக்கில் கைதுச்செய்யப்பட்டவர்கள். இதில் நான்கு பேர் முஸ்லிம்கள். தற்காப்பிற்காக சுட்டபொழுதுதான் 15 பேருமே இறந்துப் போனதாக போலீஸ் பொய்க் கதைகளை புனைந்துக் கூறுகிறது.

போலீஸ் கஸ்டடியில் வைத்தோ அல்லது கைதுச்செய்ய முற்படும்பொழுதோதான் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிரவாத எதிர்ப்புப்படையினர் நடத்திய போலி என்கவுண்டர் படுகொலைகளில் 3 மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளது. மூன்றுமே போலி என்று கண்டறியப்பட்டு இரண்டு வழக்குகளில் போலீசார் கைதுச்செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் நடத்திய 15 போலி என்கவுண்டர் படுகொலைகளில் ஒன்றுகூட விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒரே பொய்யைக் கூறி 31 அப்பாவிகளை கொன்ற குஜராத் போலீஸ்"

கருத்துரையிடுக