துபாய்,ஆக5:துபாய் கல்லூரி அருகில் ட்ராஃபிக் சிக்னலின் சமீபத்தில் வைத்து 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்திய பெண்மணி ஒருவர் மரணமடைந்தார்.இவர் கஷ்மீரைச் சார்ந்தவராவார். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் நின்றவர்கள் விபத்திற்குள்ளான வாகனங்களிலிலுள்ள பயணிகளை பிடித்து இழுத்து காப்பாற்றினர்.
ஐந்து வாகனங்களும் இணைந்து தீப்பற்றி எரிந்ததில் வானளாவிய புகை மூட்டம் ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அரை மணிநேரத்திற்கும் மேலாக கடும் முயற்சிச் செய்து தீயை அணைத்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "துபாயில் 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்து- இந்திய பெண்மணி மரணம்"
கருத்துரையிடுக