5 ஆக., 2010

ரமலானை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் 724 சிறைக்கைதிகளுக்கு விடுதலை

அபுதாபி,ஆக5:புனித ரமலான் மாதத்தையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் 724 சிறைக்கைதிகளை விடுதலைச்செய்ய ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் செய்யத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.

அபுதாபி சிறையிலிருந்து 426 பேரும்,இதர சிறைகளிலிருந்து 298 பேரும் விடுதலைச் செய்யப்படுவர்.

நீதிமன்றத் தீர்ப்பில் கூறியுள்ள அபராதம் உள்ளிட்ட பணம் தொடர்பானவைகளை தள்ளுபடிச் செய்யவும் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்படுவோரில் பல்வேறு நாடுகளைச் சார்ந்தோர் அடங்குவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரமலானை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் 724 சிறைக்கைதிகளுக்கு விடுதலை"

கருத்துரையிடுக