புதுடெல்லி,ஆக5:கஷ்மீரில் தொடரும் வன்முறை எதற்கும் பரிகாரமாகாது என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.வன்முறை நிறுத்தப்பட்டால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராகும் எனவும் பொதுமக்கள் இதில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கஷ்மீர் விவகாரத்தில் இரு அவைகளிலும் நடத்திய விளக்க அறிக்கையில்தான் ப.சிதம்பரம் இதனை தெரிவித்தார்.மாநில அரசின் சமாதான முயற்சிகளுக்கு முழு ஆதரவுத் தெரிவித்த ப.சிதம்பரம்,கஷ்மீர் விவகாரத்திற்கு அரசியல் தீர்வுதான் தேவை என்ற உமர் அப்துல்லாஹ்வின் கருத்திற்கு ஆதரவு அளித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:பேச்சுவார்த்தைக்கு தயார்- ப.சிதம்பரம்"
கருத்துரையிடுக