
ஜெனரல் ஹெச்.எம்.இர்ஷாத் 1988 ஆம் கொண்டுவந்த 'இஸ்லாம் அதிகாரப்பூர்வமான மதம்' என்ற அரசியல் சட்டத்திருத்தத்தைப் பற்றி நீதிமன்றம் விமர்சிக்காததால் மேற்கண்ட உத்தரவின் மூலம் நீதிமன்றத்தின் நோக்கம் என்ன? என்பதுக் குறித்து தெளிவற்ற நிலை நீடிக்கிறது.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காரணம் காட்டி நாட்டில் செயல்படும் இஸ்லாமிய இயக்கங்களை தடைச் செய்வதற்கு முயன்று வருகிறது அவாமி லீக் ஆட்சி!
ஷேக் ஹஸீனா வாஜித் நாட்டின் அடிப்படை பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல் யாருடைய பாராட்டைப் பெறும் மும்முரத்தில் எதிர்க்கட்சிகளையும்,விமர்சகர்களையும் அடக்கி ஒடுக்க தயாராகி வருகிறார்?.
வறுமை,நோய், வெள்ளப்பெருக்கு, சூறாவளி என பல்வேறு பிரச்சனைகளால் வளர்ச்சியில் உலக நாடுகளின் வரிசையில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது பங்களாதேஷ்!
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்து செல்வதற்கு காரணமே இத்தகைய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும், கிழக்கு பாகிஸ்தானின் வளர்ச்சியிலும் இஸ்லாமாபாத் காட்டிய அலட்சியப்போக்காகும்.
பிரதமரான பிறகு ஷேக் ஹஸீனாவின் கவனம் தன்னை விமர்சித்த பத்திரிகையாளர்களின் பக்கம் சென்றது.தற்பொழுது இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராக அவரது கவனம் சென்றுள்ளது.
1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை எனவும், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டி ஜமாஅத்தே இஸ்லாமியின் துவக்கக்கால தலைவர்களை விசாரணைச் செய்ய முயன்றுவருகிறது அவாமி லீக் ஆட்சி.
பிரபல மார்க்க அறிஞர் மறைந்த மெளலானா செய்யத் அபுல் அஃலா மவ்தூதியின் புத்தகங்களை மஸ்ஜிதுகள், நூலகங்கள், புத்தகக் கடைகளில் பாதுகாப்பதற்கு தடை ஏற்படுத்திய அரசின் உத்தரவு ஷேக் ஹஸீனா தனது தந்தை முஜீபுர் ரஹ்மானின் ஏகாதிபத்திய வழிமுறைகளை பின் தொடருகிறார் என்பதைத்தான் காட்டுகிறது.
மெளலானா மவ்தூதியின் கருத்துக்களில் கருத்துவேறுபாடுக் கொண்டோர் பலர் உள்ளனர். ஆனால் அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக சிந்தனைகளுக்கு தடை ஏற்படுத்துவது அநியாயமாகும்.
அவாமி லீக்கின் ஒரு சிறு பிரிவினரைத் தவிர பெரும்பாலான பங்களாதேஷ் குடிமக்களும் சமூகம் மற்றும் ஆன்மீக வலிமையடைதலுக்குரிய உயரிய மார்க்கமாகத்தான் இஸ்லாத்தை பார்க்கின்றார்கள்.
முஜீபின் செல்ல மகள் வரலாற்றிலிருந்து பாடம் படிக்கவேண்டும்.
விமர்சகன்
0 கருத்துகள்: on "ஏகாதிபத்தியத்தின் பாதையில் பங்களாதேஷ்"
கருத்துரையிடுக