
கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவி ஏற்றார். அப்போது அங்கு 75லட்சம் பேர் வேலை இழந்தனர். இதற்கு அடுத்த ஒரு மாதத்தில் மேலும் 6 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
இதற்கிடையே 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. பொருளாதார வளர்ச்சி குறைந்ததால் 80 லட்சம் பேர் வேலை இழந்தனர்.
இதனால் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது. அதை தூக்கி நிறுத்தும் வகையில் ஒமாபா அரசு புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது. அதன்படி அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கொண்டு வெளிநாடுகளுக்கு பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது.
தற்போது இத்திட்டம் விரைவில் அதிரடியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்தகவலை அட்லாண்டா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படும். அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியா,சீனாவுக்கு வெளி பணிகள் வழங்கும் நிறுவனங்களுக்கு அச்சலுகை வழங்கப்பட மாட்டாது.
பொதுவாக இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் கம்ப்யூட்டர் மற்றும் கால் சென்டர் பணிகளை வழங்குகின்றன. இந்த பணியில் இருநாட்டு ஊழியர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்.
ஒபாமா அரசின் நடவடிக்கையால் இனி இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் கால்சென்டர் நிறுவனங்களும், அதில் பணி புரியும் ஊழியர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
0 கருத்துகள்: on "கால்சென்டர் பணிகள் இனி இந்தியாவுக்கு கிடையாதாம்- ஒபாமா அறிவிப்பு"
கருத்துரையிடுக