4 ஆக., 2010

சி.ஆர்.பி.எப். மற்றும் மாவோயிஸ்டுகளுக்கிடையேயான மோதலில் 6 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி

தண்டேவாடா,ஆக4:சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 6 வீரர்கள் இறந்தனர்.

தண்டேவாடாவில் இன்று காலை 11 மணியளவில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரத்துக்கு மேல் சண்டையில் 6 வீரர்கள் பலியாகினர். மொத்தம் 75 வீரர்கள் சென்றனர். அவர்களில் 25 பேர் மட்டும் முகாமுக்கு திரும்பியுள்ளனர். 50 வீரர்களை காணவில்லை. தண்டேவாடாவில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக எஞ்சியிருக்கும் வீரர்கள் திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டிருக்கும் என்று கருத்தப்படுகிறது. இருப்பினும் அவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகளிடம் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சி.ஆர்.பி.எப். மற்றும் மாவோயிஸ்டுகளுக்கிடையேயான மோதலில் 6 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி"

கருத்துரையிடுக