4 ஆக., 2010

கோவா:குண்டுவெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி கைது

பானாஜி,ஆக4:ஹேமந்த் கர்கரே விசாரனை செய்து வந்த ஹிந்துத்துவ தீவிரவாதம் பற்றிய வழக்குகளை ATS விசாரணை செய்து வருகிறது.

தலைமறைவாக இருந்த சனாதன் சஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் கைது செய்யப்பட்டான். மஹாராஷ்டிரா ATS அவனை கைது செய்துள்ளது. இவனோடு சேர்த்து கோவா குண்டுவெடிப்பில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 வயதுடைய பிரசாந்த் ஜீவேகர் (கர் என்பது உயர்ஜாதி பிராமணர்களின் பெயருக்கு பின்னால் குறிக்கப்படுவதாகும்). இவன் குண்டுவடிப்பிற்கான சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் குண்டுகளை வெடிக்க வைப்பதற்கான பயிற்சியளித்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளான்.

ஜூலை 31-ம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள புசாவல் ரயில் நிலையத்தில் இரவு 9.45 மணிக்கு ATS இவனை கைது செய்தது. மேலும் இந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மூன்று பேரை பேரை பிடிக்க ஜீவேகரிடம் இருந்த பெறப்பட்ட தகவல்கள் உதவும் என ATS கூறியது.

ஜீவேகர் குண்டுவெடிப்பிற்கான முக்கிய சதிகாரன் என ATS தலைவர் ராகேஷ் மரியா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

வெடிமருந்துகளை கையாளுவது மற்றும் வெடிகுண்டுகள் செய்வது தொடர்பாக தலைமறைவாக உள்ள மூன்று குற்றவாளிகளுடன் சேர்ந்து மடேகனில் உள்ள யோகேஷ் நாய்க் என்பவனின் வீட்டிற்கு பின்புற மலைபகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பரிசோதனைக்காக சிறிய LED ஒன்றினை வெடிக்கச் செய்து பயிற்சி செய்துள்ளனர்.

குண்டுவெடிப்பு நடைபெற்ற இரவு முதல் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்க்காக ஜீவேகர் தனது இருப்பிடத்தை சுப்ரான் மாலட் பகுதியில் உள்ள தனது தாய்மாமன் வீட்டிற்கு மாற்றியுள்ளான். அங்கிருந்து கொண்டே மாலட் பரோடா, ராஜ்கோட், அஹமதாபாத், உஜ்ஜயின், லக்னோ மற்றும் பீகாரில் உள்ள புபான் உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளான்.

நான்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் 7.65 mm கைத்துப்பாக்கி ஒன்றினையும் அவனிடம் இருந்து கைபற்றியதாக ATS தலைவர் மரியா கூறினார்.

ஜீவேகர் நாசிக் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். ஆகஸ்ட் 3-ம் தேதி ஜீவேகரை போலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோவா:குண்டுவெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளி கைது"

கருத்துரையிடுக