ஆக8:ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை தொடர்புடைய ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளம், மேலும் சில சர்ச்சைக்குரிய ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.விக்கிலீக்ஸ் இணையதள செய்தித்தொடர்பாளர் டேனியல் ஷிமிட், அசோசியேட் பிரஸ்ஸுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியின்போது இதைத் தெரிவித்தார்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட ராணுவ ரகசிய ஆவணங்களைப் போன்று மேலும் சில சர்ச்சைக்குரிய ஆவணங்களை வெளியிடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் என்பதை அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை.
இவ்வாறு ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படுவதால் அரசாங்கம் சிறப்பாகச் செயல்பட இது வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: on "அமெரிக்க ராணுவ தொடர்புடைய ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் மேலும் புதிய ஆவணங்களை வெளியிட முடிவு"
கருத்துரையிடுக