8 ஆக., 2010

வெள்ள பாதிப்புக்கு காரணம் இந்தியாவாம் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு

லாகூர்,ஆக8:செனாப் நதியில் அளவுக்கு அதிகமாக வெள்ளநீரை இந்திய அதிகாரிகள் திறந்து விட்டதால் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி விட்டதாக அந் நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்திய எல்லையையொட்டி அமைந்துள்ள பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சாலை, ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாக மாறியுள்ளன.

செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே இதற்கு முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஓடும் செனாப் நதியில் அளவுக்கு அதிகமான வெள்ளநீரை இந்திய அதிகாரிகள் திறந்து விட்டதால் சியாக்கோட் மாவட்டம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி விட்டதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்நதியில் வெள்ளம் தொடர்ந்து நீடிப்பதால் குஜ்ரன்வாலா, குஜ்ராத், ஹாசியாபா உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இமாசல பிரதேசத்தில் உற்பத்தியாகும் செனாப் நதி, ஜம்மு-காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் செல்கிறது. செனாப் நதி வெள்ளம் காரணமாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வெள்ள பாதிப்புக்கு காரணம் இந்தியாவாம் - பாகிஸ்தான் குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக