1 ஆக., 2010

மத்திய பிரதேசத்தில் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய லஞ்சம் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ.: டி.வி.யில் ஒளிபரப்பான காட்சிகளால் பரபரப்பு

ஆக,1:மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் இருந்து சட்டசபைக்கு தேர்வானார் ரமேஷ் கதீக். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆன இவரை தொழில் அதிபர் அஜித் என்பவர் அணுகி, கல்லூரி ஒன்றை தொடங்க உதவுமாறு கேட்டார்.

சிவ்புரி மாவட்டத்தில் நிலமதிப்பு விலை மிக, மிக குறைவு என்பதால் அங்கு பெரிய இடத்தை வாங்கி என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது தொழில் அதிபர் அஜித் ஆசையாகும்.ஆனால் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்து பெறுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்தே அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேசை சந்தித்து பேசினார். அப்போது எம்.எல்.ஏ. ரமேஷ் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். எம்.எல்.ஏ.யிடம் பரிந்துரை கடிதம் பெறுவதற்காக சமீபத்தில் அஜித் சென்றிருந்தார். அப்போது அவர் எம்.எல்.ஏ. ரமேசிடம் லஞ்சத்துக்கு அட்வான்சாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

அந்த லஞ்சபணத்தை ரமேஷ் எம்.எல்.ஏ. கை நீட்டி வாங்கிக் கொண்டார். இந்த காட்சிகள் எம்.எல்.ஏ.க்கு தெரியாமல் படம் பிடிக்கப்பட்டது. இன்று காலை அந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.


எம்.எல்.ஏ. ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சியை பார்த்து மத்திய பிரதேச மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாரதீய ஜனதா தலைவர்களிடம் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கும் காட்சிகளில் வசனமும் இடம் பெற்றுள்ளது. எந்த இடத்தில் நிலம் வேண்டும் என்று எம்.எல்.ஏ. கேட்கிறார். அதற்கு லஞ்சம் கொடுப்பவர், தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் கொடுத்தால் வசதியாக இருக்கும் என்கிறார்.

மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 13 பா.ஜ.க. மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் லஞ்சம் வாங்கிகையும் களவுமாக சிக்கி இருப்பது அந்த கட்சித்தலைவர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கும் காட்சி அடங்கிய சி.டி.யை மத்திய பிரதேச அரசு வாங்கி சோதித்து வருகிறது. வீடியோ காட்சிகள் உண்மை என்று தெரிந்தால் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மத்திய பிரதேசத்தில் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய லஞ்சம் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ.: டி.வி.யில் ஒளிபரப்பான காட்சிகளால் பரபரப்பு"

கருத்துரையிடுக