1 ஆக., 2010

இந்திய ராணுவ ரகசியங்களை மெயிலில் அனுப்பிய மேஜரிடம் ராணுவ நீதிமன்ற விசாரணை

ஆக,1:பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ.க்கு,இந்திய ராணுவ ரகசியங்களை மெயிலில் அனுப்பிய மேஜரிடம் ராணுவ நீதிமன்ற விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பீகார் ரெஜிமென்ட்டில் நியமிக்கப்பட்டவர் மேஜர் சந்தானு தே. அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேரில் பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.அந்தக் குழுவில் மேஜர் சந்தானுவும் இடம்பெற்றார். இவர் தனது கம்ப்யூட்டரில் 2,000க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ ரகசியங்களை பதிவு செய்து வைத்திருந்ததும், அவற்றை பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ.க்கு அனுப்பி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடந்த தீவிர விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த தகவல்களை அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள்,இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.அதன்பின் உஷாரான ராணுவ அதிகாரிகள், மேஜர் சந்தானுவை கண்காணித்து, கம்ப்யூட்டர் மூலம் பாகிஸ்தானுக்கு மெயில் அனுப்பியதை கண்டுபிடித்தனர்.

அதில் 2000க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் இருந்துள்ளன.அவை இந்திய ராணுவத்திடம் உள்ள ரகசிய போர் விமானங்கள் பற்றிய ஆவணங்கள். இதுபோன்ற ரகசிய ஆவணங்கள், மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ளவரிடம் மிகமிக பாதுகாப்பாக உள்ளவை. இந்த ஆவணங்கள் மேஜர் சந்தானுவுக்கு எப்படி கிடைத்தன, இதில் வேறு யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று ராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சந்தானுவிடம் ராணுவ நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திய ராணுவ ரகசியங்களை மெயிலில் அனுப்பிய மேஜரிடம் ராணுவ நீதிமன்ற விசாரணை"

கருத்துரையிடுக