கொல்கத்தா,ஆக,1:"என்னைக் கொல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்கொலைப் படை அமைத்திருக்கிறது" என்று ரயில்வே அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுக்குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
"அண்மையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில், என்னைக் கொல்வதற்கு தற்கொலைப் படை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக இருப்பதாக மார்க்சிஸ்ட் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த சதியில் மேற்கு வங்க அரசுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுகிறது.
எனது நடமாட்டம், நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சியினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.எனது அலுவல்கள் குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
அரசியல்ரீதியாக என்னை எதிர்க்க முடியாததால்,கொலை செய்ய கோழைத்தனமாக சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதற்காக, மேற்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சிறப்பு முகாம்களை அமைத்து ஆயுதம் ஏந்திய தொண்டர்களை பணியமர்த்தியுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சுபந்துவை கொல்லவும் தற்கொலைப் படை அமைக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

0 கருத்துகள்: on "'என்னைக் கொல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்கொலைப்படை தீவிரம்'- மம்தா குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக