28 ஆக., 2010

கஷ்மீர்:போலீஸ் தனது பாணியை மாற்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவுரை

புதுடெல்லி,ஆக28:கஷ்மீரில் போராடுவதற்கு தெருவில் இறங்கும் மக்களை சுட்டுக்கொல்லும் போலீஸ் பாணியை பிரதமர் மன்மோகன்சிங் விமர்சித்துள்ளார்.

போராட்டக்காரர்களை எதிர்கொள்ளும்பொழுது பாதுகாப்புப் படையினர் தற்போதைய பாணிக்கு மாற்றமாக ஆள் சேதமில்லாத வழிகளை கடைபிடிக்கவேண்டும்.

இண்டலிஜன்ஸ் பீரோ ஏற்பாடுச் செய்த 3 நாட்கள் அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் உரை நிகழ்த்தினார் மன்மோகன்சிங்.

மக்கள் கூட்டத்தை கலைக்க ஆள் சேதமில்லாத அதேவேளையில் பயன்தரத்தக்க வழிமுறைகளை கையாள உயர்மட்டக்குழு ஒன்று உருவாக்கி 3 மாதத்திற்குள் கட்டளைகளை சமர்ப்பிக்க பிரதமர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

கஷ்மீரில் தீவிரவாதச் செயல்கள் குறைந்தபோதிலும்,சட்டம்-ஒழுங்கு கவலைக்குரியதாக மாறிவிட்டது. சட்டம்-ஒழுங்கை உறுதிச்செய்வதுதான் அரசுக்கு முன்னாலிருக்கும் பெரும் சவால். எல்லாப்பிரச்சனைகளையும் ஒரே மாதிரியாக கையாளக்கூடாது.தற்போதைய பாணியை புனர் பரிசோதிக்கவேண்டும் என மன்மோகன்சிங் கூறினார்.

கடந்த 2 மாதங்களுக்கிடையே 64 கஷ்மீரிகள் கொல்லப்பட்ட சூழலில்தான் மன்மோகன்சிங்கின் இந்த உரை அமைந்துள்ளது. பொதுமக்களை கட்டுப்படுத்த பழையமுறைகளை மாற்றிவிட்டு சூழலுக்கு உகந்த முறைகளை வெளிநாடுகள் கையாளுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சமூகப்பிரச்சனைகள், வளர்ந்துக் கொண்டிருக்கும் பொருளாதார சமத்துவமின்மை, மத வெறுப்பு உள்ளிட்டவைகளுடன் இடதுசாரி தீவிரவாதமும், மதத்தீவிரவாதமும் நாட்டில் போலீஸின் செயல்பாடுகளை சிக்கலுக்கு ஆளாக்கிவருகின்றன.

பாதுகாப்பு ஏஜன்சிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் தேவையையும் அவர் அழுத்தமாக தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகளும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். அவர்கள் தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராகவேண்டும்.

தீவிரவாதிகளும்,அழிவுசக்திகளும் ஒன்றிணைவது தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். போலீஸ் அதிகாரிகளுக்கு மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கும் முறையை மாற்றிவிட்டு அவர்களின் செயல்பாடுகள், சாதனைகள் ஆகியவற்றை கவனத்தில்கொண்டு பதவி உயர்வு நடைமுறையில் கொண்டுவரப்படும் என மன்மோகன்சிங் கூறினார்.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:போலீஸ் தனது பாணியை மாற்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவுரை"

கருத்துரையிடுக