டெல்அவீவ்,ஆக,13:இஸ்ரேலின் தடையால் துயரத்தை அனுபவித்து வரும் காஸ்ஸாவிற்கு உதவுவதற்கு நிவாரணப்பொருட்களுடன் வரும் கப்பல்களை மீண்டும் தாக்குவோம் என இஸ்ரேல் மிரட்டியுள்ளது.
இத்தகையதொரு முயற்சிகளுக்கு யாரேனும் துணிந்தால்,எங்களுடைய ஆயுதம் பதிலளிக்கும் என இஸ்ரேலிய லெஃப்டினண்ட் ஜெனரல் காபி அஷ்கனாஸி தெரிவித்துள்ளார்.
ஹைஃபாவில் ராணுவ நிகழ்ச்சியொன்றில் உரையாற்றினார் அவர். கடந்த மே 31 ஆம் தேதி காஸ்ஸாவிற்கு வருகைப்புரிந்த நிவாரணக்கப்பல் மீது தாக்குதல் நடத்தியது தற்காப்பிற்காக என்றும்,அது சட்டரீதியானதுதான் எனவும் காபி கூறினார்.
கடந்த மே மாதம் இஸ்ரேல் காஸ்ஸாவிற்கு வந்துக் கொண்டிருந்த துருக்கி நிவாரணக்கப்பல் மீது நடத்திய தாக்குதலில் 9 துருக்கியர்கள் மரணமடைந்தனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.
இஸ்ரேலிய கமாண்டோக்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக கப்பலிருந்தவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர். கப்பலிருந்தவர்களை பிடித்து நிறுத்தி துப்பாக்கியால் சுட்டனர் என்பது துருக்கியின் வாதம். ஆனால், இதனை இஸ்ரேல் மறுக்கிறது.
முப்பதிற்குமேற்பட்ட தோட்டாக்கள் கொல்லப்பட்டவர்களின் உடல்களிலிருந்து எடுக்கப்பட்டது என்ற போஸ்ட்மார்ட்டம் அறிக்கை இஸ்ரேலின் வாதத்திற்கு எதிரானதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "காஸ்ஸா நிவாரணக் கப்பல்களை மீண்டும் தாக்குவோம்: இஸ்ரேல்"
கருத்துரையிடுக