5 ஆக., 2010

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்காக வாதாடும் வக்கீல்களை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை

மும்பை,ஆக5:தங்களுக்காக வாதாடும் வக்கீல்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக் கோரி, மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மும்பையில் 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி, ரயில்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த வழக்கு தொடர்பாக, சித்திக், முகமது அலி, முகமது மஜீத் மற்றும் கமால் அன்சாரி என்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு, மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் ('MCOCA') கீழ், தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது.

இந்நிலையில்,கைதான நான்கு பேரும் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்களுக்காக வாதாடும் வக்கீல்கள் மோகஷி மற்றும் கலீத் முகமதுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பதிலாக புதிய வக்கீல்களை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், டிஸ்மிஸ் செய்யக் கோருவதற்கான காரணங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. அவர்களின் மனு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்காக வாதாடும் வக்கீல்களை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை"

கருத்துரையிடுக