1 ஆக., 2010

ஆர்ப்பாட்டத்தின் போது தமுமுக ஆம்புலன்ஸை நொறுக்கிய பாஜக குண்டர்கள்!

ஆக1:தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.

கடந்த ஜுலை-24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தகுடும்பத்தினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.

ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும், வேகமாக வருமாறு அதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர் தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி திருப்பினார். வரும் வழியில், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால்,அவர் வண்டியை மெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.

அப்போது காவல்துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது தொண்டர்களிடம்
ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு அறிவித்திருக்கிறார். எந்த விதி மீறலும் யாருக்கும் இடையூறு இல்லாமலும் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.

மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்றுவிட்டார். அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,ஆம்புலன்ஸை கட்டைகளால் உடைத்து, டிரைவரை கொலைவெறியுடன் தேடி உள்ளனர். டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்டேங்கை உடைத்து, வண்டியை துவம்சம் செய்ய, இதைப் பார்த்தபொதுமக்கள் சப்தம் போட,அதற்குள் ஓடிவந்த காவல்துறையினர் பாஜகவினர் மீதுதடியடி நடத்தியதும், வன்முறைகும்பல் ஓடத் தொடங்கியது.

அதற்குள் பாஜகவினர் தங்களின் அயோக்கியத்தனத்தை மறைக்க, ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர். ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாமிட்டு இருந்ததால், அவர் தலைமையிலான போலிசார்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.

போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளை போட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.

இத்தகைய அராஜக செயலுக்கு தமுமுக தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, ஆம்புலன்ஸை தாக்கிய பாஜக கும்பலை கைது செய்ய வேண்டும் இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் என திருவாரூர் மாவட்ட தமுமுக அறிவித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆர்ப்பாட்டத்தின் போது தமுமுக ஆம்புலன்ஸை நொறுக்கிய பாஜக குண்டர்கள்!"

கருத்துரையிடுக