20 ஆக., 2010

மோடியை விசாரணைச் செய்த விபரங்களை வெளியிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி,ஆக20:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைத் தொடர்பாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை மேற்கொண்ட விபரங்களை ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

மோடியின் வாக்குமூலத்தின் விபரங்களை சிறப்பு புலனாய்வு பிரிவு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தபொழுதுதான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

மோடியிடம் விசாரணை மேற்கொண்ட விபரங்களை நானாவதி கமிஷனிடம் அளிக்க வேண்டியதில்லை எனவும் சுப்ரீம் கோர்ட் தெளிவுப்படுத்தியுள்ளது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப் படுகொலையின் பொழுது குல்பர்கா சொசைட்டியில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட 70 பேர்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் தீவைத்துக் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

இவ்வழக்கில் மோடி உள்ளிட்டவர்கள் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி அளித்த மனுவைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கை விசாரணைச்செய்ய ஒப்படைத்தது. இவ்வழக்கில் கடந்த மார்ச் மாதம் நரேந்திரமோடியை எஸ்.ஐ.டி 8 மணிநேரம் விசாரித்திருந்தது. இவ்விசாரணையின் விபரங்களை நீதிமன்றம் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தவிர வேறு எவருக்கும் வழங்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவை போட்டுள்ளது.

குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் ஜி.ஸடாஃபியா,டி.ஜி.பி எம்.கே.தாண்டன், ஐ.ஜி பி.பி.கோண்டியா ஆகியோரை விசாரிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் கூடுதலாக விசாரணை மேற்கொள்ள எஸ்.ஐ.டிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "மோடியை விசாரணைச் செய்த விபரங்களை வெளியிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட்"

PUTHIYATHENRAL சொன்னது…

சிந்திக்க: உலகம் அறிந்த தீவிரவாதியிடம் பூப்போல விசாரணை ஒருகுற்றமும் செய்யாத மதானியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு. இந்தியா ஹிந்து மயமாகி வருகிறது என்பதை இப்பவாவது இந்த முட்டாள் முஸ்லிம் தலைவர்கள் உணர்வார்களா? சீக்கிரம் ஒரு சுதந்திர போராட்டதிற்கு தயாராகுங்கள். 40 கோடி இந்திய முஸ்லிம்களுக்கு என்று ஒரு நாடு உருவாக்குவோம். அதுதான் நமது சிந்தனையாக இருக்க முடியும். அதுவரை இந்த துயரங்கள் தொடரும்.

கருத்துரையிடுக