24 செப்., 2010

ஈரானில் ராணுவ அணிவகுப்பில் குண்டுவெடிப்பு: 10 பேர் மரணம்

டெஹ்ரான்,செப்.24:வடமேற்கு ஈரானில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு ஒன்றில் குண்டு வெடித்தது. இதில் இவ்வணிவகுப்பை காணவந்த 10 பேர் பலியாயினர். பல வருடங்களாக அரசுக்கு எதிராக போராடிவரும் குர்து பிரிவினைவாதிகள்தான் இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஈராக்-துருக்கி எல்லையில் அமைந்துள்ள மஹபாதில்தான் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 57 பேருக்கு காயம் ஏற்பட்டது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளுமாவர் என மாகாண கவர்னர் வாஹித் ஜலால் ஸாதே
கூறுகிறார்.

ஈராக்கிலும், துருக்கியில் கிளைகளை பரப்பியுள்ள குர்திஸ்தான் வர்க்கேர்ஸ் பார்டியின் ஈரான் பிரிவுடன் ஈரான் ராணுவம் எல்லையில் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதுண்டு.

ராணுவ அணிவகுப்புச் செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த குண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது.

அயல் நாடுகளின் உதவியுடன் செயல்படும் பயங்கரவாதிகள்தான் இத்தாக்குதலை நடத்தியதாக ஜலால்ஸாதே கூறுகிறார்.

ஈரான் - ஈராக் போரின் 30-வது ஆண்டு நினைவுக் கொண்டாடும் விதமாகத்தான் இந்த அணிவகுப்பு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் இல்லை. ஆனால் வி.ஐ.பி பார்வையாளர்கள் பகுதியிலிருந்த உயர் அதிகாரிகளின் மனைவிகள் இருவர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர் என மெஹர் நியூஸ் ஏஜன்சி தெரிவிக்கிறது. தாக்குதலை பொறுப்பை எவரும் பொறுப்பேற்கவில்லை.

190000 மக்கள் தொகையைக்கொண்ட மஹபாத் ஒரு காலத்தில் ஈரானில் சுயமாக பிரகடனப்படுத்திய குர்திஸ்தான் குடியரசின் தலைநகராக விளங்கியது. 1946-ஆம் ஆண்டு ஈரான் ராணுவம் இப்பிரதேசத்தை மீட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரானில் ராணுவ அணிவகுப்பில் குண்டுவெடிப்பு: 10 பேர் மரணம்"

கருத்துரையிடுக