24 செப்., 2010

ஐ.எஸ்.ஐ செலவழித்த பணத்திற்கு கணக்கில்லை

இஸ்லாமாபாத்,செப்.24:பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ(இண்டர் சர்வீஸ் இண்டலிஜன்ஸ்) க்கு உளவு வேலைக்காக அனுமதிக்கப்பட்ட 555 கோடி ரூபாய் எதற்காக செலவழிக்கப்பட்டது என்பதற்கான கணக்கு விபரங்கள் இல்லை.

நிதித்துறை அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி 2007-2008 ஆம் ஆண்டுகளில் அதிக தொகையாக 555 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது.

பாராளுமன்ற அக்கவுண்ட்ஸ் கமிட்டியின் இதுத் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க நிதித்துறைச் செயலர் சல்மான் சித்தீகி தயாரில்லை. இது ரகசியமானதால் வெளிப்படையாக இதனை கூற
இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.

"எத்தனை காலம் தான் எங்களை முட்டாள்களாக்குவீர்கள்" என இக்கமிட்டியின் உறுப்பினரான நவாஸ் ஷெரீஃப் கட்சியைச் சார்ந்த குவாஜா ஆஸிஃப் வினா எழுப்பியுள்ளார்.

எந்தவித விளக்கங்களுமில்லாமல் இத்தகையதொரு பெரிய தொகையை எவ்வாறு ஒப்புக்கொள்ள இயலும் என பாகிஸ்தான் பீப்பிள்ஸ் கட்சியின் யாஸ்மின் ரஹ்மான் கூறுகிறார். தகவலை கமிட்டியிடம் தெரிவிக்க முடியாது என்றால் பின்னர் ஏன் கமிட்டியின் கவனத்திற்கு இந்தத் தொகையை கொண்டுவர வேண்டும்? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐ.எஸ்.ஐ செலவழித்த பணத்திற்கு கணக்கில்லை"

கருத்துரையிடுக