24 செப்., 2010

க்ரவுண்ட் ஸீரோ மஸ்ஜிதிற்காக மைக்கேல் மூர் 60 ஆயிரம் டாலர் சேகரித்தார்

வாஷிங்டன்,செப்.24:செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்காக பிரபல ஆவணப்பட தயாரிப்பாளரான மைக்கேல் மூர் 60 ஆயிரம் டாலர் சேகரித்துள்ளார்.

மஸ்ஜித் உள்ளிட்ட இஸ்லாமிய கலாச்சார மையத்திற்கு 10 ஆயிரம் டாலர் நன்கொடையாக அளிக்கவேண்டுமென தனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தபொழுது 48 மணிநேரத்தில் வேண்டுகோள்விடுத்த தொகையை விட 5 மடங்கு அதிகமாக வசூலானதாக மைக்கேல் மூர் தெரிவித்தார்.

பார்க் 51 என்றழைக்கப்படும் இஸ்லாமிய கலாச்சாரமைய நிர்மாணத்திற்கு 10 கோடி டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரவுண்ட் ஸீரோவுக்கருகில் மஸ்ஜித் நிர்மாணிப்பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் ஆதரவு தெரிவித்து களமிறங்கினார் மைக்கேல் மூர்.

"எல்லா மதங்களிலும் வெறியர்கள் உள்ளனர். அவர்களிடன் நடவடிக்கைக்கு அந்த மதத்தின் மீது பழி சுமத்துவது கூடாது. க்ரவுண்ட் ஸீரோவிலிருந்து இரண்டு கட்டிடம் தள்ளியுள்ள மக்டொனால்டின் ஷாப் உள்ளது. தீவிரவாதிகள் கொன்றதைவிட கூடுதல் ஆட்களை உலகத்தில் கொலைச் செய்தது மக்டொனால்ட்" என மைக்கேல் மூர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "க்ரவுண்ட் ஸீரோ மஸ்ஜிதிற்காக மைக்கேல் மூர் 60 ஆயிரம் டாலர் சேகரித்தார்"

கருத்துரையிடுக