24 செப்., 2010

யூதக குடியேற்ற நிர்மாணம் - கிழக்கு ஜெருசலத்தில் மோதல்

ரமல்லா,செப்.24:யூதக் குடியேற்றக்காரர்களும், ஃபலஸ்தீனிகளுக்குமிடையே கிழக்கு ஜெருசலமில் நடந்த மோதலில் ஒரு ஃபலஸ்தீனியர் கொல்லப்பட்டார்.

குடியேற்றக்காரர்களில் பாதுகாவலர் அரபிகளுக்கெதிராக துப்பாக்கியால் சுட்டார். குடியேற்ற நிர்மாணங்களின் சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ஃபலஸ்தீனர்களின் வீடுகளை இடிக்க முயன்றதுதான் பிரச்சனைக்கு காரணமாகும்.

மோதலைத் தொடர்ந்து ஃபலஸ்தீனர்கள் பாதுகாப்பு படைவீரனை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்பொழுது இஸ்ரேலிய பாதுகாப்பு படைவீரன் துப்பாக்கியால் சுட்டதில் ஏராளமான ஃபலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

பாதுகாப்பு படைவீரர்கள் காரில் வரும்வேளையில் தடை ஏற்படுத்தி ஃபலஸ்தீனர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுதான் பிரச்சனைக்கு காரணம் என இஸ்ரேலிய போலீஸ் செய்தித் தொடர்பாளர் மிக்கி ரோஸன்ஃபெல்ட் தெரிவிக்கிறார்.

கொல்லப்பட்ட 32 வயதான ஸெமீன் ஸெர்ஹானின் உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைவீரனை கைதுச் செய்துள்ளதாகவும், விசாரணை நடந்துவருகிறது எனவும் போலீஸ் கூறுகிறது.

இஸ்ரேலிய குடியேற்றங்கள் அதிகமான ஸில்வானில் 45 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் உள்ளனர். புராதனப் பொருட்கள் துறைக்கு வழி ஏற்படுத்துவதற்கு ஃபலஸ்தீனர்களின் வீடுகளை இடிப்பதற்கு ஜெருசலம் நகர கவுன்சில் கடந்த ஜூனில் தீர்மானித்தது. இதற்கெதிராக ஃபலஸ்தீனர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

யூத குடியேற்ற நிர்மாணங்களுக்கு தலைமைவகிக்கும் எலாத் என்ற அமைப்புதான் விவாதத்திற்குரிய இத்திட்டத்திற்கு தலைமை வகிக்கிறது.

88 வீடுகள் இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்
நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பேச்சுவார்த்தைக்கு
பலமான பாதிப்பாக மாறும் என கருதப்படுகிறது.

மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலமிலும் இஸ்ரேல் குடியேற்றம் சட்டவிரோதம் என ஐ.நா அறிவித்திருந்தது. இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்தால் அதற்கு முழுப்பொறுப்பும் இஸ்ரேல்தான் என ஃபலஸ்தீன் பிரதிநிதிகள் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்திருந்தனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யூதக குடியேற்ற நிர்மாணம் - கிழக்கு ஜெருசலத்தில் மோதல்"

கருத்துரையிடுக