அபுதாபி,செப்.24:பல்வேறு அரபு நாடுகள் அமெரிக்காவிடமிருந்து 12,300 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதாக செய்தி கூறுகிறது.
வளைகுடா வரலாற்றில் மிகப்பெரிய ஆயுத உடன்பாடு நடக்கப்போகிறது.
அணுஆயுதத்தின் பெயரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், ஈரானின் பதிலடி வளைகுடா நாடுகளையும் பாதிக்கும் என்ற பிரச்சாரம்தான் அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 6700 கோடி பண மதிப்பிலான ஆயுதங்களை சவூதி அரேபியா வாங்குகிறது. முதல் கட்டமாக 3000 கோடி மதிப்பு ஆயுதங்கள் வழங்க அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
ஈரானிற்கெதிராக தாக்குதல் நடந்தால், ஹோர்முஸ் விரிகுடா வழியாக எண்ணையைக் கொண்டு செல்வதற்கு தடை ஏற்படாமலிருக்கத்தான் அமெரிக்கா வளைகுடா பகுதிகளை ஆயுதமயமாக்க திட்டமிடுகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
4000 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை யு.ஏ.இ வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டிற்குள் 1200 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை ஒமானும், 700 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை குவைத்தும் வாங்கிட திட்டமிட்டுள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "வளைகுடா நாடுகள் அமெரிக்காவிடமிருந்து 12, 300 கோடி ஆயுதங்களை வாங்குகின்றன"
கருத்துரையிடுக