23 செப்., 2010

நவம்பர் 21 முதல் தேசிய ஆரோக்கிய வாரம்: பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை

பெங்களூர்.செப்23:நவம்பர் 21 முதல் 28 வரையிலான தினங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் தேசிய ஆரோக்கிய வாரம் கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் பொழுது ஆரோக்கியத்தை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறித்தும் இவற்றில் பொதுமக்களின் பங்கினைக் குறித்தும் அவர்களை விழிப்புணர்வூட்டுவதே இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

'ஆரோக்கியமான சமூகம்! ஆரோக்கியமான தேசம்!' என்பது இப்பிரச்சாரத்தின் முழக்கமாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் யூனிட்டுகளும், உறுப்பினர்களும் உள்ள எல்லா மாநிலங்களிலும் இந்த பிரச்சாரம் வித்தியாசமான நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷெரீஃப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நோய் பரவுவதை தடுத்தல், யோகா, விளையாட்டு, உடற்பயிற்சி, முறையான உணவு முறைகள் ஆகியனக் குறித்த வகுப்புகளும், கண்காட்சிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கும்.

பிரச்சாரத்தின் பகுதியாக விளையாட்டு போட்டிகள், சுத்தம், ஆவணப்படங்கள் திரையிடல், தெரு நாடகங்கள் ஆகியன நடைபெறும்.

ஆரோக்கிய,கல்வித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடைபெறும் இப்பிரச்சாரம் அரசு நடத்தும் பொதுமக்கள் ஆரோக்கிய பாதுகாப்பு நிகழ்ச்சிகளுக்கு வலு சேர்க்கும்.

தேசிய ஆரோக்கிய வாரத்தின் பிரச்சாரத்திற்காக ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம், உருது, கன்னடா, பெங்காளி, தெலுங்கு, மணிப்பூரி ஆகிய மொழிகளில் மடக்கோலைகள், சுவரொட்டிகள் ஆகியன வெளியிடப்படும். இவ்வாறு கே.எம். ஷெரீஃப் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் நடத்திய ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் திரளாக ஆதரவளித்து பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நவம்பர் 21 முதல் தேசிய ஆரோக்கிய வாரம்: பாப்புலர் ஃப்ரண்ட் அறிக்கை"

கருத்துரையிடுக