இஸ்லாமாபாத்,செப்.28:ஆஃப்கான் நேட்டோ படையினரின் விமானத் தாக்குதலில் பாகிஸ்தானில் 50 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு அபாச்சி ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி குரம் பழங்குடியினர் பகுதியில் தாக்குதல் நடந்தது.
ஆப்கானிஸ்தானில் கோஸ்த் மாகாணத்தில் ராணுவ மையத்தின் மீது நேற்று முன்தினம் போராளிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடைபெற்றதாக நேட்டோ இத்தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளது.
ஆஃப்கான் ஆக்கிரமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக இத்தாக்குதலை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி பாகிஸ்தானில் நடத்தியுள்ளது நேட்டோ. கொல்லப்பட்டவர்களெல்லாம் போராளிகள் என நேட்டோ கூறுகிறது. ஆனால், தங்களுடைய பகுதியில் நேட்டோ தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தானிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஆனால், குறிப்பிட்ட கிலோமீட்டரில் பாகிஸ்தான் விமான எல்லையில் நுழைய தங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வடக்கு வஸீரிஸ்தானை குறிவைத்து கடந்த சனிக்கிழமை நேட்டோ ராணுவம் முதலில் தாக்குதலில் ஈடுபட்டதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் ரியான் டொனால்ட் தெரிவிக்கிறார்.
பாகிஸ்தான் எல்லையில் தங்களுடைய ஹெலிகாப்டர்கள் நுழைந்தது தற்காப்பிற்காகத்தான் என அவர் மேலும் தெரிவித்தார். 60 போராளிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கோஸ்த் மாகாண போலீஸ் தலைவர் அப்துல் ஹகீம் இஸாக்சி அறிவித்துள்ளார்.
இன்னொரு தாக்குதலில் நேட்டோ ஆறு போராளிகளை கொன்றது. கொல்லப்பட்டவர்கள் ஹக்கானி அமைப்பைச் சார்ந்தவர்கள் என பாகிஸ்தான் பத்திரிகைகள் கூறுகின்றன.
இந்த மாதம் இப்பகுதியில் நடக்கும் 20-வது தாக்குதலாகும் இது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் நேட்டோ விமானத் தாக்குதல் - 50க்கும் மேற்பட்டோர் மரணம்"
கருத்துரையிடுக