28 செப்., 2010

புதிய குடியேற்ற நிர்மாணம் துவங்கியது: பேச்சுவார்த்தையிலிருந்து விலக ஹமாஸ் கோரிக்கை

டெல்அவீவ்,செப்.28:ஃபலஸ்தீன் பிரதேசங்களில் சட்டவிரோத குடியேற்ற நிர்மாணங்களுக்கு பகுதி அளவில் ஏற்படுத்தியிருந்த தடை நேற்று முடிவடைந்ததோடு மேற்கு கரையில் 2000 புதிய வீடுகளின் நிர்மாணத்தை துவக்கியுள்ளனர் யூதர்கள்.

நப்லூஸிற்கு அடுத்துள்ள ரிவாவ குடியேற்ற மையத்தில் தடை முடியும் முன்பே அதாவது ஞாயிற்றுக்கிழமை நடு இரவிற்கு முன்பு குடியேற்ற நிர்மாணம் துவங்கியது.

ஹாரன்களை முழக்கியும், ஆயிரக்கணக்கான பலூன்களை பறக்கவிட்டும் தீவிர நிலைப்பாடுடைய குடியேற்றக்காரர்கள் இதனை கொண்டாடினர். அநியாயமான தீர்மானத்தை வரலாற்றின் குப்பைக் கூடையில் தள்ளியதாக லிக்கூட் கட்சியின் எம்.பி டானி டானன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் நிர்பந்தத்தை பொருட்படுத்தாமல் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்திற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அதேவேளையில், 10 மாத மொரட்டோரியம் வேளையில் புதிய வீடுகளின் நிர்மாணத்தில் 10 சதவீதம் மட்டுமே குறைவு ஏற்பட்டது என இஸ்ரேலின் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டேடிக்ஸின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுவார்த்தையை தொடர நெதன்யாகு மஹ்மூத் அப்பாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குடியேற்ற நிர்மாணத்தை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் என ஏற்கனவே அப்பாஸ் கூறியிருந்தார். இஸ்ரேல் ஒன்று சமாதானத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது குடியேற்ற நிர்மாணத்தை என கடந்த சனிக்கிழமை ஐ.நாவில் நடத்திய உரையில் அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் என்று முன்பு கூறிய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் விதத்தில் நேற்று அல்ஹயாத் பத்திரிகைக்கு அளித்த நேர்முகப் பேட்டியில் கூறியிருந்தார் அப்பாஸ்.

அப்பாஸ், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையிலிருந்து விலகவேண்டும் எனவும், ஃபத்ஹ் -ஹமாஸ் ஐக்கியத்திற்காக தனது கவனத்தை திருப்பவேண்டும் எனவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கிடையேயும் குடியேற்ற நிர்மாணத்தை தொடர்வதான இஸ்ரேலின் தீர்மானம், ஃபலஸ்தீன் உரிமைகளை புறக்கணித்துவிட்டு யூத தேசம் உருவாக்குவதற்கான போர்வையாக பேச்சுவார்த்தையை பயன்படுத்துவதாக ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் ஃபவ்ஸி பர்ஹூம் தெரிவிக்கிறார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புதிய குடியேற்ற நிர்மாணம் துவங்கியது: பேச்சுவார்த்தையிலிருந்து விலக ஹமாஸ் கோரிக்கை"

கருத்துரையிடுக