இஸ்தான்புல்,செப்.28:இஸ்ரேலின் தடையால் துயருறும் காஸ்ஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு யூதக்குழுவின் கப்பல் புறப்பட்டது. இஸ்ரேல், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களிலிலுள்ள யூதர்களை உட்படுத்திய கப்பல் வடக்கு சைப்ரஸிலிருந்து புறப்பட்டது.
மூன்று கப்பல் பணியாளர்கள் உட்பட எட்டுபேர் ஃபாமகுஸ்தா துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். இதில் இருவர் பத்திரிகையாளர்கள். ஃபலஸ்தீனில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் தடைக்கெதிராகத்தான் யூதக்குழு புறப்பட்டதாக பிரிட்டனில் ஜஸ்டிஸ் ஃபார் ஃபலஸ்தீனியன் என்ற யூத அமைப்பின் சேவகர் ரிச்சார்டு கூப்பர் தெரிவித்தார்.
அமைதியையும், நீதியையும் விரும்பும் இஸ்ரேலியர்களுடனும், ஃபலஸ்தீனர்களுடனும் பரஸ்பர ஐக்கியத்திற்கான நற்செய்தியை தாங்கள் பரிமாறுவதாகவும், இஸ்ரேல் அரசின் கொள்கையில் அனைத்து யூதர்களின் ஆதரவு இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், காஸ்ஸாவிற்கு வரும் எந்தக் கப்பலையும் தடுப்போம் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "காஸ்ஸாவிற்கு நிவாரணப் பொருட்களுடன் யூதக்குழு புறப்பட்டது"
கருத்துரையிடுக