நியூயார்க்,செப்.28:அமானுஷ்ய சக்திகளைக் கொண்ட ஊனமுற்ற முஸ்லிம் சிறுவனை நாயகனாக கொண்ட காமிக்ஸ் புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் சிரியாவைச் சார்ந்த சில ஊனமுற்றோர்கள் சேர்ந்து இந்த காமிக்ஸின் கதையை தயாராக்கியுள்ளார்கள்.
அமெரிக்க சமூக சேவகரான ஜெய் டி ஸ்னைடர் உருவாக்கிய ஓப்பன் ஹேண்ட்ஸ் இன்ஸ்டியூட்டின் முயற்சியில் ஊனமுற்றோர்களை டமாஸ்கஸில் ஒன்றுகூட்டப்பட்டனர். சூப்பர் ஹீரோவின் உருவம் எவ்விதத்தில் அமையும் என்பது இதுவரை தீர்மானமாகவில்லை. கண்ணிவெடித் தாக்குதலில் கால்களை இழந்த முஸ்லிம் சிறுவன் தான் முக்கிய கதாபாத்திரம்.
மனதால் உலகத்தை கட்டுப்படுத்தும் சக்தி தனக்குள்ளது என உணர்ந்த அவன் சில்வர் ஸ்கார்பியன் என்ற கதாபாத்திரமாக மாறுகிறான். அரபி, ஆங்கில மொழிகளில் புத்தகத்தை நவம்பரில் வெளியிட தீர்மானித்திருப்பதாக லிக்யூட் காமிக்ஸின் சி.இ.ஒ சரத் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இளைய தலைமுறையின் எண்ணங்களை பயன்படுத்தி காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடும் நிறுவனம்தான் லிக்யூட் காமிக்ஸ்.
முஸ்லிம் உலகத்தோடு நெருங்குவதற்கு அதிபர் ஒபாமாவின் முயற்சிகள்தான் ஊனமுற்றோரான அமெரிக்கர்கள் 12 பேரை டமாஸ்கஸில் சிரியா நாட்டவர்களுடன் ஒருங்கிணைப்பதற்கு தன்னை தூண்டியதாக ஸ்னைடர் கூறுகிறார்.
புதிய சூப்பர் ஹீரோவிற்கான கொள்கைகளை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். முதல் கட்டமாக, அரபி மொழியிலான 50 ஆயிரம் காமிக்ஸ் புத்தகங்கள் சிரியாவில் விநியோகிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "முஸ்லிம் சிறுவன் நாயகனாக மாறும் புதிய காமிக்ஸ் புத்தகம்"
கருத்துரையிடுக