செப்.23:கஷ்மீர் பிரச்சனைத் தொடர்பாக ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
நியூயார்க்கில் கவுன்சில் ஆஃப் ஃபாரின் ரிலேசன்ஸ் என்ற அமைப்பு ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி இதனை தெரிவித்தார்.
மத்திய ஆசியாவின் பிரச்சனைக்கு முயற்சி எடுக்கும் அமெரிக்கா கஷ்மீர் பிரச்சனையில் தலையிட முன்வரவேண்டும் என அவர் கூறினார்.
ஃபலஸ்தீன் பிரச்சனை மேற்காசியாவின் அமைதிக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல் தெற்காசிய அமைதிக்கு கஷ்மீர் பிரச்சனைக்கு முக்கியமாகும். ஆனால் இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காதது ஆச்சரியமளிப்பதாக குரைஷி குறிப்பிட்டார்.
சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் தான் கஷ்மீரில் நடந்து வருகிறது. வெளியேயுள்ள சக்திகள் போராட்டத்திற்கு பின்னணியில் உள்ளது என்ற கூற்றை எவரும் நம்பமாட்டார்கள். அப்பகுதியில் பயங்கரவாதத்தை தடுக்க கஷ்மீர் பிரச்சனையில் கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு குரைஷி கூறினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:சர்வதேச சமூகம் தலையிட பாகிஸ்தான் கோரிக்கை"
கருத்துரையிடுக