நியூயார்க்,செப்.23:கஷ்மீரில் 3 மாதங்களாக தொடர்ந்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும், எல்லா பிரிவினர்களும் கட்டுப்பாட்டுடன் நடந்துக்கொள்ள வேண்டுமெனவும் ஐ.நா வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா பொதுச் செயலாளருக்காக அவருடைய செய்தித் தொடர்பாளர் மார்டின் நெஸிர்கீ இதுத் தொடர்பான அழைப்பை விடுத்துள்ளார்.
கஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் மூன்.
கஷ்மீர் தொடர்பாக கடந்த மாதம் இந்தியாவிற்கு ஐ.நா சார்பாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல் செய்திக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தொடர்ந்து இது ஊடகங்களுக்கான செய்தி மட்டுமே என்றும், பொதுச்செயலாளரின் அறிக்கை அல்ல எனவும் ஐ.நா விளக்கமளித்தது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக நியூயார்க்கிலிருக்கும் பான் கி மூன் சார்பாக இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மாலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:மோதலை நிறுத்த ஐ.நா கோரிக்கை"
கருத்துரையிடுக