காபூல்,செப்.19:249 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு 2500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மோதும் ஆஃப்கான் தேர்தலில் வாக்குகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒரு டாலர் முதல் 18 டாலர் வரை வாக்கிற்கு விலைப் பேசப்பட்டது.
அரசு மற்றும் அரசியலில் நம்பிக்கையிழந்த ஏழ்மை நிலையிலிலுள்ள ஆஃப்கானிகள் கிடைத்த விலைக்கு வாக்களிக்க தயாராகினர்.
குண்டூஸ் மாகாணத்தில் ஒரு வாக்கின் விலை 15 டாலராகும். கிழக்கு கஸ்னியில் ஒரு வாக்கின் விலை 18 டாலர். காந்தஹாரிலோ ஒரு வாக்கிற்கு ஒரு டாலர் கொடுத்தால் போதும். ஐந்து டாலருக்கும் ஆறு டாலருக்குமிடையேதான் சராசரி மதிப்பு வாக்கிற்கு அளிக்கப்படுகிறது.
தினமும் ஒரு டாலருக்கு குறைவான வருமானத்தை உடையவர்கள்தான் ஆஃப்கானிகளில் பெரும்பாலோர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாதந்தோறும் 2200 டாலர் சம்பளமும், ஊழலுக்கு அதிக வாய்ப்புகளும் இருப்பதால் பல தனவந்தர்களும் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
தேர்தல் மீது மக்களின் விருப்பமின்மையும், தாலிபான் போராளிகளின் மிரட்டலும் காரணமாக குறைந்த வாக்குகள் கிடைத்தாலே வெற்றிப்பெற்று விடலாம் என்ற நிலைதான் ஆப்கானில்.
பல இடங்களிலும் வெற்றிபெற 2500 வாக்குகள் கிடைத்தால் போதும் என்ற நிலை அங்கு நிலவுகிறது.
10 ஆயிரம் வாக்காளர் அட்டையை வாங்கிய வேட்பாளரை தனக்குத் தெரியும் என்கிறார் நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள ஸ்பிங்கார் மாவட்டத்தின் மேயர் உஸ்மான் ஷெஷாரி என்பவர். அந்த வேட்பாளர் ஓவ்வொரு கிராமத்திலும் பிரதிநிதிகளை அனுப்பி 11 டாலர் வீதம் அளித்து வாக்காளர் அட்டைகளை வாங்குவதாக அவர் கூறுகிறார். கிராமவாசிகளிடமிருந்து கார்டுகளை வாங்கி
வேட்பாளர்களுக்கு விற்கும் ஏஜண்டுகளும் களத்தில் உள்ளனர். கிடைக்கும் தொகையில் பகுதி வாக்காளர்களுக்கும், பகுதி ஏஜண்டுகளுக்கும் கிடைக்கும்.
பெண் வாக்காளர்களின் வாக்கு அட்டைக்குத்தான் அதிக மதிப்பு. ஏனெனில் அதில் புகைப்படம் இல்லாததால் கள்ள வாக்களிக்க எளிது என்பதுதான் காரணம். வாக்காளர் அட்டையை அளிக்கும் இடைத்தரகர் வாக்காளரை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்தாரானால் விலை அதிகம் கிடைக்கிறது என மேயர் கூறுகிறார்.
அதேவேளையில், பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அட்டைகளும் சந்தையில் விற்பனையில் உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆஃப்கானில் ஒரு வாக்கின் விலை ஒரு டாலர்"
கருத்துரையிடுக