19 செப்., 2010

கஷ்மீரில் ராணுவ நடவடிக்கை:ஈரான் கண்டனம்

டெஹ்ரான்,செப்.19:அமெரிக்காவில் புனித திருக்குர்ஆனை அவமதித்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவத்தின் நடவடிக்கையை ஈரான் கண்டித்துள்ளது.

தங்களுடைய புனித நூலான திருக்குர்ஆன் அவமதிக்கப்படும் பொழுது முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது இயல்பானதாகும். அத்தகைய எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்களை சுட்டுக் கொல்வது திருக்குர்ஆனை அவமதிப்பதை ஆதரிப்பதற்கு சமம் என ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மான்பெரஸ்த் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் கஷ்மீரில் 15 பேர் கொல்லப்பட்டனர். மத பிரிவினர்களுக்கிடையே உருவாகும் பிரச்சனைகளை தடுப்பதில் இந்தியா கட்டுப்பாட்டுணர்வை கடைப்பிடிக்க வேண்டும் என மெஹ்மான்பெரஸ்த் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீரில் ராணுவ நடவடிக்கை:ஈரான் கண்டனம்"

கருத்துரையிடுக