டமாஸ்கஸ்,செப்.19:ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நஜாதும் சிரியாவின் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதும் டமாஸ்கஸில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இரு நாடுகளுக்கிடையேயான உறவு வலுப்படுவது இப்பகுதியில் பாதுகாப்பிற்கும், உலக சமாதானத்திற்கும் அத்தியாவசியமானது என நஜாத் சுட்டிக்காட்டினார்.
சிரியாவுடனான உறவில் தங்களுக்கு வரம்புகளில்லை. ஃபலஸ்தீன் நாடு அங்கீகரித்தல் மட்டுமே மேற்காசிய பிரச்சனைகளுக்கான தீர்வு. அப்பிரதேசத்தின் எதிர்காலத்தில் தங்களுக்கு ஒரு பங்கும் இல்லை என்பது, அங்கே பிரச்சனையை உருவாக்கும் இஸ்ரேலுக்கு தெரியும். தற்பொழுது நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியாகும். இவ்வாறு நஜாத் கூறினார்.
இரு நாடுகளுக்கிடையேயான உறவு இஸ்லாமிய உலகத்திற்கு சக்தியை பகரும் என ஆஸாத் தெரிவித்தார். சந்திப்பிற்கு பிறகு அல்ஜீரியாவுக்கு புறப்பட்ட நஜாத் தொடர்ந்து ஐ.நாவின் பொதுசபைக் கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக அமெரிக்கா செல்வார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பஸ்ஸாருடன், நஜாத் சந்திப்பு"
கருத்துரையிடுக