5 அக்., 2010

பாகிஸ்தானில் 27 நேட்டோ டாங்கர்களை தீவைத்துக் கொளுத்திய போராளிகள்

இஸ்லாமாபாத்,அக்.5:பாகிஸ்தான் தலைநகருக்கு சமீபம் எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த 27 நேட்டோ டாங்கர்களை போராளிகள் தாக்குதல் நடத்தி தீவைத்துக் கொளுத்தினர்.

ஆஃப்கனில் நேட்டோ ராணுவத்தினருக்கு சொந்தமானது இந்த டாங்கர்கள்.இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு காரணம் நாங்கள் தான் என பாகிஸ்தான் தாலிபான் அறிவித்துள்ளது.

நேட்டோ படையினர் கடந்த வாரம் நடத்திய விமானத் தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லபட்டதைத் தொடர்ந்து கைபர் பாஸ் வழியாக நேட்டோ வாகனங்கள் ஆஃப்கான் செல்வதற்கு பாகிஸ்தான் தடைவிதித்திருந்தது.

இஸ்லாமாபத்திற்கு வெளியே உள்ள ராவதில் நள்ளிரவில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. எந்திரத் துப்பாக்கிகளுடன் வந்த 12 பேர் இரு புறமும் நின்று தாக்குதல் நடத்தியதாக இஸ்லாமாபாத்தின் மூத்த போலீஸ் அதிகாரி உமர் ஃபாருக் தெரிவிக்கிறார். டாங்கர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதால் தீப்பிடித்ததாக அவர் தெரிவிக்கிறார்.இத்தாக்குதலில் ஒன்பது பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து டாங்கர் ஓட்டுநர்கள் ஓடி தப்பிவிட்டனர். கடந்த 3 தினங்களுக்கிடையே இரண்டாவது தடவையாக நேட்டோ வாகனங்கள் மீது இத்தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு சிந்து மாகாணத்தில் நடந்த நேட்டோவுக்கு எதிரான தாக்குதலில் நேட்டோவிற்கு தேவையான பொருட்களுடன் சென்ற 27 லாரிகள் தீக்கிரையாகின.

நேட்டோவிற்கு பொருட்களை கொண்டுபோகும் முக்கிய வழிதான் கைபர் பாஸ். இவ்வழியில் எப்பொழுது போக்குவரத்து மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்படவில்லை.போராளிகளை பின் தொடர்ந்து நடத்திய தாக்குதலில்தான் நேற்று முன்தினம் மூன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.இந்நடவடிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃபலி சர்தாரி குற்றஞ்சாட்டியிருந்தார்.

நேட்டோவுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் 200 லாரிகள் எல்லையில் முடங்கிக் கிடக்கின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் 27 நேட்டோ டாங்கர்களை தீவைத்துக் கொளுத்திய போராளிகள்"

கருத்துரையிடுக