5 அக்., 2010

வாடிகனின் எதிர்ப்பை புறக்கணித்து கத்தோலிக்க பெண்மணி பாதிரியாரானார்

வாஷிங்டன்,அக்.5:வாடிகான் எதிர்ப்பை புறக்கணித்து அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கத்தோலிக்க பெண்மணியொருவர் சுயமாக பாதிரியாராக பிரகடனப்படுத்தியுள்ளார்.

67 வயதான ஜூடி லீ என்பவர்தான் வாடிகானின் கட்டளையை மீறி பாதிரியாராக மாறியவர். பெண்கள் புரோகிதராகுவதை கத்தோலிக்க சபை அங்கீகரிப்பதில்லை. சுவிசேஷத்திற்காக அனுப்பப்பட்ட யேசுகிறிஸ்துவின் 12 சீடர்களில் பெண்கள் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டித்தான் வாடிகான் இதனை எதிர்கிறது.

கத்தோலிக்க சபையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளூர் பிஷப் ஜூடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மதச்சட்டங்களை மீறியதாக ஜூடியை கத்தோலிக்க சபையிலிருந்து வெளியேற்றியதாக ரெவரண்ட்.ஃப்ராங்க் டிவைன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கத்தோலிக்க சபை எத்தகைய மத கட்டளைகளை வேண்டுமானால் வெளியிடலாம் எனவும், தான் அவற்றையெல்லாம் மதிக்கவில்லை எனவும் ஜூடி பதில் அளித்துள்ளார்.

கத்தோலிக்க சபையின் கடும் எதிர்ப்பை புறக்கணித்து ஜூடியைப்போல் புரோகிதராக மாறிய 100 க்கும் மேற்பட்ட பெண்கள் அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் உள்ளனர்.

பெண்கள் பாதிரியார்களாக மாறுவது, பாலகர்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்துவது போன்ற குற்றம் என வாடிகான் கடந்த ஜூலையில் வெளியிட்ட உத்தரவு ஜூடியையும் அவரைச் சார்ந்தவர்களையும் பிரபலமாக்கியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வாடிகனின் எதிர்ப்பை புறக்கணித்து கத்தோலிக்க பெண்மணி பாதிரியாரானார்"

கருத்துரையிடுக