5 அக்., 2010

ஃபலஸ்தீன் சிறுவனை மனிதக்கேடயமாக பயன்படுத்திய இஸ்ரேலிய ராணுவத்தினர் குற்றவாளிகள்

டெல்அவீவ்,அக்.5:கடந்த 2009 ஆம் ஆண்டு காஸ்ஸாவின் மீது நடத்திய தாக்குதலின் பொழுது ஃபலஸ்தீன் சிறுவன் ஒருவனை மனிதக்கேடயமாக பயன்படுத்திய இரண்டு இஸ்ரேலி ராணுவத்தினர் குற்றவாளிகள் என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

காஸ்ஸாவின் நகரமான டெல் அல் ஹவாவில் வீட்டில் சந்தேகத்திற்கிடமாக அனாதையாக கிடந்த பையில் குண்டிருப்பதாக கருதி அதனை சோதனையிட ஃபலஸ்தீனைச் சார்ந்த ஒன்பது வயது சிறுவனை இஸ்ரேலிய ராணுவத்தினர் பயன்படுத்தியதாக தெற்கு கமாண்ட் நீதிமன்றம் உறுதிச்செய்துள்ளது. ஆனால், ராணுவத்தினர் நெருக்கடியில் இருந்ததாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சிவிலியன்களை மனிதக்கேடயமாக பயன்படுத்துவதை தடைச்செய்துள்ள இஸ்ரேலில் இதுத்தொடர்பான வழக்கில் முதல் தீர்ப்பு இதுவாகும். தண்டனைக் குறித்த தீர்ப்பை இன்னொரு நாளில் ஒத்திவைத்தது நீதிமன்றம்.

டெல் அல் ஹவாவில் ஃபலஸ்தீன் சிறுவனை கேடயமாக பயன்படுத்திய சம்பவம் கடந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி நிகழ்ந்தது. பையில் வெடிப்பொருட்கள் இல்லாததால் சிறுவனை விடுவித்துள்ளனர்.

2008 டிசம்பரில் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது அக்கிரமமான தாக்குதலை நடத்தியது. 22 நாட்கள் நீண்ட இத்தாக்குதலில் 1400 ஃபலஸ்தீனர்களும், 13 இஸ்ரேலிய ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் மூலம் இஸ்ரேல் போர்குற்றம் புரிந்துள்ளதாக இச்சம்பவத்தைக் குறித்து விசாரித்த நீதிபதி கோல்ட் ஸ்டோன் தலைமையிலான ஐ.நா குழு கண்டறிந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் சிறுவனை மனிதக்கேடயமாக பயன்படுத்திய இஸ்ரேலிய ராணுவத்தினர் குற்றவாளிகள்"

கருத்துரையிடுக