18 அக்., 2010

தேர்தல் வன்முறை:கராச்சியில் 28 பேர் மரணம்

இஸ்லாமாபாத்,அக்.18:கராச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 28 பேர் கொல்லப்பட்டனர். 52 பேருக்கு காயம் ஏற்பட்டது.

முத்தஹிதா குவாமி மூவ்மெண்டின் மாகாண சட்டமன்ற உறுப்பினர் ராஸா ஹைதர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில்தான் கலவரம் மூண்டது.

கடந்த ஆகஸ்டில் ஹைதர் கொல்லப்பட்டிருந்தார். அதேவேளையில், வன்முறைக்கு காரணம் அவாமி நேசனல் பார்டி என குவாமி மூவ்மெண்ட் குற்றஞ்சாட்டுகிறது. தேர்தலை புறக்கணிப்பதாக அவாமி நேசனல் பார்டி அறிவித்த உடனேயே வன்முறைகள் துவங்கிவிட்டதாக குவாமி மூவ்மெண்ட் குற்றஞ்சாட்டுகிறது.

தேர்தலில் குவாமி மூவ்மெண்டிற்கும், அவாமி நேசனல் பார்டிக்குமிடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. நகரத்தில் உருது மொழி பேசும் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கட்சிதான் குவாமி மூவ்மெண்ட். பஷ்தூன் பிரிவு மக்களிடம் செல்வாக்குப் பெற்ற கட்சி அவாமி நேசனல் பார்டி.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் கடைகளுக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி அதிகமான நஷ்டங்களை ஏற்படுத்தியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தேர்தல் வன்முறை:கராச்சியில் 28 பேர் மரணம்"

கருத்துரையிடுக