18 அக்., 2010

பங்களாதேஷ்:ஜியாவுற் ரஹ்மானை கொன்றது ஜெனரல் இர்ஷாத் என தகவல்

டாக்கா,அக்.18:பங்களாதேஷ் முன்னாள் அதிபரும், பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான ஜியாவுற் ரஹ்மானை கொன்றது ஜெனரல் மன்சூர் அல்ல என்றும், ராணுவ தளபதியும், ஜாதீயா கட்சியின் தலைவருமான ஜெனரல் ஹுசைன் முஹம்மது இர்ஷாத் தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜாதீயா கட்சியின் தலைவர்களில் ஒருவரான நஸீம் உஸ்மான் என்பவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். ஜியாவுற் ரஹ்மானை கொன்றது ஜெனரல் மன்சூர் என எல்லோரும் நம்பியிருந்தனர்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுது தனது கட்சியினரை அதிர்ச்சியடையும் விதமாக உஸ்மான் இத்தகவலை வெளியிட்டார்.

பங்களாதேசின் தந்தை எனப் போற்றப்படும் ஷேக் முஜீப் ரஹ்மான் கொல்லப்படுவதற்கு முக்கிய சூத்திரதாரியாக இருந்த ஜெனரல் ஜியாவுற் ரஹ்மான் 1981 ஆம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார்.

ஆளுங்கட்சியான அவாமி லீக்கிற்கு ஆதரவு அளிக்கும் ஜாதீய கட்சி அரசில் முக்கிய பங்கு வகிக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பங்களாதேஷ்:ஜியாவுற் ரஹ்மானை கொன்றது ஜெனரல் இர்ஷாத் என தகவல்"

கருத்துரையிடுக